திரைத்துறையில் 50 ஆண்டுள் நிறைவு: ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்த டி.டி.வி.தினகரன்

கோப்புப்படம்
சென்னை,
அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
திரைத்துறையில் 50 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் அன்பிற்குரிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அபூர்வ ராகங்கள் தொடங்கி நாளை வெளியாக இருக்கும் கூலி திரைப்படம் வரை மூன்று தலைமுறை ரசிகர் பட்டாளத்தைத் தக்கவைத்து அரைநூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகராகத் திகழும் நண்பர் ரஜினிகாந்த் அவர்களின் 50 ஆண்டு கால திரைப்பயணம் பல்வேறு அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் உள்ளடக்கியது.
திரைப்படத்தில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கலைப்பயணம் மேன்மேலும் சிறக்க வேண்டும் என்பதோடு அவர் நடிப்பில் உருவாகி நாளை வெளியாக இருக்கும் கூலி திரைப்படம் மாபெரும் வெற்றியடைய மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.