திருவிழாவில் கும்மி நடனமாடி அசத்திய நடிகர் சூரி

மதுரை,
நடிகர் சூரி, மதுரையில் தனது சொந்த ஊர் கோவில் திருவிழாவில் மக்களோடு ஒன்று கூடி கும்மியடித்து பாடல் பாடி நடனமாடியுள்ளார்.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சூரி, தங்கள் ராஜாகூர் கிராமத்தில் திருவிழா மகிழ்ச்சி பொங்க கோலாகலமாக துவங்கியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திரையுலகில் பிரபலமானாலும், ஊர் திருவிழாவில் மக்களோடு மக்களாய் கலந்து கொண்ட சூரியை பலரும் பாராட்டி வருகின்றனர்.