திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை திரிஷா

சென்னை,
தென்னிந்திய திரைப்பட உலகில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, தனது நடிப்பால் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தமிழ் மற்று தெலுங்கில் பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ள திரிஷா ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார். அவரது படங்களை தாண்டி தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் அடிக்கடி இணையத்தில் பேசப்படுவது வழக்கம்.
சமீபத்தில் திரிஷாவின் திருமண செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சண்டிகரை சேர்ந்த ஒரு தொழிலதிபரை அவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள தகவல் வெளியானது. இந்த தகவல் குறித்து திரிஷாவின் தாயாரை தொடர்பு கொண்டபோது, “இது அடிக்கடி வரும் தகவல்கள்தான். இதில் உண்மை இல்லை. திரிஷாவுக்கு திருமணம் நடந்தால் சந்தோஷம்தான்” என்றார்.
இந்த நிலையில் திரிஷா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் “என்னுடைய வாழ்க்கையை பிறர் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எனது தேனிலவையும் அவர்களே திட்டமிட்டு கொடுப்பார்கள் என காத்திருக்கிறேன்!” என கிண்டலாக பதிவிட்டுள்ளார். தற்போது திரிஷா வெளியிட்டு இருக்கும் பதிவால், திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.