திருமண தேதியை அறிவித்த பிரபல நடிகர்|Allu Sirish announces his wedding date

திருமண தேதியை அறிவித்த பிரபல நடிகர்|Allu Sirish announces his wedding date


சென்னை,

நடிகர் அல்லு சிரிஷ் மற்றும் அவரது காதலி நயனிகா ரெட்டி ஆகியோர் அடுத்தாண்டு மார்ச் 6 அன்று திருமணம் செய்து கொள்ள உள்ளனர். ஒரு வேடிக்கையான இன்ஸ்டாகிராம் ரீல் மூலம் திருமண தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதில் சிறப்பு என்னவென்றால், அல்லு சிரிஷின் சகோதரர் அல்லு அர்ஜுனின் திருமணமும் இதே தேதியில் நடந்தது. அல்லு அர்ஜுன் மற்றும் சினேகா ரெட்டியின் திருமணம் 2011-ம் ஆண்டு மார்ச் 6 அன்று நடந்தது. இப்போது, ​​அல்லு சிரிஷின் திருமணமும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதே தேதியில் நடக்க உள்ளது.

இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ராம் சரண் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *