திருமண ஆசை குறித்து மனம் திறந்த நடிகை சுஷ்மிதா சென்

திருமண ஆசை குறித்து மனம் திறந்த நடிகை சுஷ்மிதா சென்


மும்பை,

தமிழில் ‘ரட்சகன்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுஷ்மிதா சென். முதல்வன் படத்தில் சக்கலக்க பேபி என்ற பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

தற்போது 49 வயதாகும் நடிகை சுஷ்மிதா சென், இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ரோஹ்மன் என்பவருடன் காதல் மலர்ந்த நிலையில், பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் சுஷ்மிதா சென் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர், “எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த சுஷ்மிதா சென், “எனக்கு திருமணம் செய்து கொள்ள ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் பொருத்தமான மாப்பிள்ளை அமைவது முக்கியம். திருமணம் என்பது ஒரு சாதாரண நிகழ்வாக இருக்கக்கூடாது. இரு இதயங்கள் காதலோடு இணையக்கூடியதாக இருக்க வேண்டும். அதுபோன்ற உணர்வு எனது இதயத்தில் உருவாகும்போது திருமணம் செய்து கொள்வேன்” என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *