திருமணமாகாமல் தனியாக இருப்பதிலும் மகிழ்ச்சி இருக்கிறது – நடிகை சமந்தா, There is happiness in being single without getting married

திருமணமாகாமல் தனியாக இருப்பதிலும் மகிழ்ச்சி இருக்கிறது – நடிகை சமந்தா, There is happiness in being single without getting married


நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து மணந்து, பின்னர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். சமீபத்தில் நாகசைதன்யா ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலாவை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

சமந்தாவும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். சிட்டாடல் ஹனி பன்னி வெப் தொடரை இயக்கி பிரபலமான ராஜ் நிடிமோரை சமந்தா காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் திருமணம் குறித்து சமந்தா கூறும்போது, ”எனது வாழ்க்கையில் திருமண பந்தத்தை கடந்து வந்துவிட்டேன். பெண்கள் திருமணம் செய்து குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டமைப்பை சமூகத்தில் உருவாக்கி வைத்துள்ளனர்.

திருமணமாகி குழந்தை பெற்றவர்கள்தான் வாழ்க்கையில் முழுமை அடைகிறார்கள் என்றும் பேசுகின்றனர். ஆனால் நான் அதில் உடன்படவில்லை. திருமணமாகாமல் தனியாக இருப்பதிலும் மகிழ்ச்சி இருக்கிறது. பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னம்பிக்கையோடும், மன உறுதியோடும் வாழ முடியும்” என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *