திருமணத்தில் ஆர்வம் இல்லை…கூறும் 47 வயது நடிகை…ஏன் தெரியுமா?

சென்னை,
சமீபத்தில் “பிக் பாஸ் 9 தெலுங்கில்” போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை பிளோரா சைனி, கடந்த வார இறுதியில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மனம் திறந்து பேசினார்.
47 வயதாகியும் தான் ஏன் தனிமையில் இருக்கிறேன் என்பது குறித்துப் பேசிய நடிகை, திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணத்தை கூறினார்.
அவர் கூறுகையில், ‘என்னை சுற்றி பல தோல்வியடைந்த திருமணங்களை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு திருமணம் செய்து கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை. திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இப்போதெல்லாம், திருமணங்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குள் விவாகரத்தில் முடிவடைகின்றன,” என்றார்.