திருமணத்திற்கு தயாரான பிரபல நடிகை…மாப்பிள்ளை யார் தெரியுமா?

சென்னை,
இந்த நடிகைக்கு இந்தி மற்றும் தெலுங்கில் அதிக ரசிகர்கள் உள்ளனர். தனது நடிப்பால் இளம் வயதிலேயே பிரபலமானார்.
கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ”பாலிகா வது” என்ற இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். அதில் ஆனந்தி வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அவர் வேறு யாரும் இல்லை நடிகை அவிகா கோர்தான். மார்னிங் வாக் (2009) என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து தெலுங்கில் இவர் நடித்த ”உய்யாலா ஜம்பலா” படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு, தெலுங்கில் தொடர் வெற்றிகளைப் பெற்றார். இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தார்.
இந்நிலையில் இவர் திருமணம் செய்து கொள்ளத் தயாராகி உள்ளார். சமூக ஆர்வலர் மிலிந்த் சந்த்வானியை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். கடந்த ஜூன் மாதம் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் வருகிற 30-ம் தேதி நடைபெற உள்ளது.