திருமணத்தின் போது பீர், கஞ்சா கேட்ட மணப்பெண் – கடைசியில் போலீசாருக்கு காத்திருந்த ட்விஸ்ட்!

திருமணத்தின் போது பீர், கஞ்சா கேட்ட மணப்பெண் – கடைசியில் போலீசாருக்கு காத்திருந்த ட்விஸ்ட்!


திருமண இரவன்று மணப்பெண் ஒருவரின் வினோத கோரிக்கையைக் கேட்டு மணமகன் குடும்பம் அதிர்ச்சியடைந்துள்ளது.

திருமணம்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாரன்பூரில் இளம்பெண்ணுக்குத் திருமணம் நடந்துள்ளது. அன்று இரவு முஹ் திகாய் விழா சடங்கு நடத்தப்பட்டது.

முஹ் திகாய் விழா என்பது மணமகளுக்குத் திருமணத்திற்குப் பிறகு புது மணப்பெண் முகத்தைக் காண்பித்தல் நிகழ்வாகும்.

திருமணத்தின் போது பீர், கஞ்சா கேட்ட மணப்பெண்

அப்போது அந்த இளம்பெண் தன்னுடைய கணவரிடம் பீர், கஞ்சா மற்றும் ஆட்டு இறைச்சியைத் தருமாறு கேட்டிருக்கிறார். இதனை கேட்ட மணமகன் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து மணமகன் பீர் வழங்குவதற்கு ஒத்துக்கொண்டார். ஆனால் அனைத்தையும் தருமாறு வற்புறுத்தியதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

வினோத கோரிக்கை


இளம்பெண்ணின் கோரிக்கையைக் கேட்டு மன வேதனையடைந்த மணமகன், இது குறித்து தனது குடும்பத்தினருடன் தெரிவித்துள்ளார். இதனால் இரு குடும்பங்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருமணத்தின் போது பீர், கஞ்சா கேட்ட மணப்பெண்

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆலோசனை நடத்தினர். அப்போது மணமகள் ஒரு பெண் அல்ல, மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *