திருப்பதி கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த நடிகர் சூர்யா

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உள்ள சூர்யா, ரெட்ரோ படத்தை அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்துள்ளார். திரிஷா, சுவாசிகா, ஷிவதா, நாட்டி நடராஜ், யோகிபாபு என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து தற்போது வெங்கி அட்லூரி இயக்கும் தனது 46 வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடித்து வருகிறார் .
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். மனைவி ஜோதிகா, மகன் தேவ் உள்ளிட்டோருடன் திருப்பதி சென்ற சூர்யாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் கோயிலில் மனமுருகி வேண்டினார். திருப்பதி கோவில் வளாகத்தில் நடிகர் சூர்யாவை பார்த்ததும் ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர். சூர்யாவிற்கு பக்தர் ஒருவர் சாமி சிலையை பரிசாக வழங்கினார்.