திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் சாமி தரிசனம்


திருப்பதி

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்திற்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *