திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன்- நடிகை ஷோபனா | I would like to play a transgender role

சென்னை,
பிரபல நடிகையான ஷோபனா, சினிமா நடிப்பு மட்டுமின்றி பரதநாட்டிய ஆசிரியையாகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்த ‘துடரும்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. படத்தில் அவரது கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வகையில் அமைந்திருந்து அவரது நடிப்பும் மிகுந்த பாராட்டைப் பெற்றது.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், “நான் ஒரு திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். இதற்காக 2 இயக்குனர்களிடம் பேசினேன். அவர்கள் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று சொன்னார்கள்.
அவர்களிடம் மம்முட்டி ஏற்றுக்கொள்ளப்படவில்லையா என்று கேட்டேன். திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நான் காத்திருக்கிறேன். அந்த கேரக்டரில் நடிப்பது கடினம். அதற்காக தோற்றம், பேச்சு வழக்கு மற்றும் குரலை மாற்ற வேண்டி இருக்கும். ஆனாலும் அது எனக்கு ஒரு சவாலாக இருக்கும்” என்று கூறினார்.
ஷோபனா கூறிய மம்முட்டி கேரக்டர் ‘காதல் தி கோர்’ என்ற படத்தில் மம்முட்டி ஓரினச்சேர்க்கையாளராக நடித்திருந்தார். அதை குறிப்பிட்டு ஷோபனா தற்போது கூறியிருக்கிறார்.






