திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த இயக்குனர் பா.விஜய்

திருச்செந்தூர் ,
முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதன்படி, இயக்குனரும்,� நடிகரும், பாடலாசிரியருமான பா.விஜய் கோவிலில் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, பெருமாள் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோரை வணங்கினார். தரிசனம் முடித்து வெளியே வந்த அவருடன் பக்தர்கள், பொதுமக்கள் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.