'திராவிட வெற்றிக் கழகம்'- நடிகை அபிராமி புதிய கட்சி தொடங்கினாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் அபிராமி. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்ததையடுத்து அந்த பேராசிரியருக்கு ஆதரவாக அபிராமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த போஸ்டரில் “திராவிட வெற்றிக் கழகம்” என்ற கட்சியை அபிராமி தொடங்கியது போலவும் பொதுமக்கள் அவரை புகைப்படம் எடுப்பது போவும் அமைக்கப்பட்டுள்ளது.
அபிராமி புதிய கட்சியை தொடங்கினாரா? இல்லை புதிய படத்தின் போஸ்டரா என்று நெட்டிசன்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.