தியேட்டர்களில் வெளியாகும் ஸ்ட்ரேஞ்சர்ஸ் திங்ஸ்?

சென்னை,
உலகப் புகழ்பெற்ற நெட்பிளிக்ஸ் இணையத் தொடர் ஸ்ட்ரேஞ்சர்ஸ் திங்ஸ்-ன் இறுதி எபிசோடை திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
5வது மற்றும் கடைசி சீசனின் இறுதி எபிசோட் டிச.31ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், அதே நாளில் திரையரங்குகளிலும் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த எபிசோடின் நீளம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.