“திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குனு..”- கிண்டல் பதிவுக்கு நடிகர் சூரியின் நச் பதில்

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. இவர் விடுதலை , கருடன் , மாமன் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்தார். தற்போது, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் சூரி தனது சொந்த பந்தங்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தின் போது எடுத்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவின் கீழ் ஒருவர் “திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை” என கிண்டலடித்து கமெண்ட் செய்துள்ளார்.
இதற்கு சூரி சற்றும் கோபப்படாமல் “திண்ணையில் இல்லை நண்பா பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்… அந்த பாதைகள்தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்” என பதிலளித்துள்ளார்.