தாய்மை என்பது வரம்.. அந்த வரம் எனக்கும் கிடைக்கும்- நடிகை சமந்தா | Motherhood is a blessing.. I will also get that blessing

தாய்மை என்பது வரம்.. அந்த வரம் எனக்கும் கிடைக்கும்- நடிகை சமந்தா | Motherhood is a blessing.. I will also get that blessing


சென்னை,

‘மயோசிடிஸ்’ நோய் தாக்கத்தால் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த சமந்தா, தற்போது முன்பு போல படங்கள் நடித்து வருகிறார்.

சமந்தாவும், ‘பேமிலிமேன்’ வெப் தொடர் இயக்குனரான ராஜ் நிடிமொருவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் பேசப்படுகிறது.

இதற்கிடையில் சமந்தா கூறியுள்ள கருத்துகள் கவனம் ஈர்த்துள்ளனர். அவர் கூறும்போது, ‘‘என் வயதை பற்றி என் நலம் விரும்பிகள் கவலைப்படுகிறார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் அதற்காக நான் தாய்மையடைய தாமதமாகி போகிறது என்று நினைக்க வேண்டாம். ஒரு தாயாக வேண்டும் என்ற எனது கனவு இன்னும் அப்படியே தான் இருக்கிறது.

அந்த அழகான அனுபவத்தை எதிர்நோக்கி நான் ஆவலாக காத்திருக்கிறேன். ஒரு பெண் நினைத்தால், அவள் தாயாக முடியாத நேரம் என்று வாழ்க்கையில் எதுவும் இல்லை. தாய்மை என்பது வரம். அந்த வரம் எனக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன்”, என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *