தவளை இனத்திற்கு "டைட்டானிக்" நடிகர் பெயரை சூட்டிய ஆராய்ச்சியாளர்கள்!

தவளை இனத்திற்கு "டைட்டானிக்" நடிகர் பெயரை சூட்டிய ஆராய்ச்சியாளர்கள்!


பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து, இயக்கிய படம் டைட்டானிக். ஒரு கப்பலையும், காதலையும் மையமாகக் கொண்டு உலகின் மிகச் சிறந்த ஒரு காதல் காவியமாக எடுக்கப்பட்டது. 1997 ம் ஆண்டில் வெளியான இந்தப் படம், உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்ததோடு ரசிகர்கள் அனைவரின் மனதையும் வென்றது.

ஈக்வடாரில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தவளை இனத்திற்கு டைட்டானிக் பட நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயரிடப்பட்டுள்ளது. அழிந்து வரும் விலங்குகளைப் பாதுகாப்பதில் லியோனார்டோ டிகாப்ரியோ தனது ஆதரவைக் காட்டி வருவது வழக்கம்.

இந்த நிலையில், சுற்றுச்சூழலையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பது பற்றி அடிக்கடி பேசும் ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் நினைவாக, தவளைக்கு “பிலோனாஸ்டஸ் டிகாப்ரியோ” என்று பெயரிடப்பட்டது. தி டெலிகிராப் இதழ் கூற்றுப்படி, புதிதாகக் கண்டறியப்பட்ட இந்த தவளை இனம் ஈக்வடாரின் எல் ஓரோ மாகாணத்தில் மேற்கு பகுதியில் உள்ள மலைப்பாங்கான வனப்பகுதியில் காணப்படுகின்றன.

இந்த தவளையானது மற்ற உயிரினங்களைப் போலல்லாமல், இது உடலில் கருமையான புள்ளிகள் மற்றும் தனித்துவமான விரல் வடிவம் போன்ற தனித்துவமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. ஈக்வடார் தேசிய பல்லுயிர் நிறுவனம், ஈக்வடார் கத்தோலிக்க பல்கலைக்கழகம் மற்றும் சான் பிரான்சிஸ்கோ குய்டோ பல்கலைக்கழகம் (USFQ) உள்ளிட்ட பல ஈக்வடார் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள், ஆறு புதிய இனங்களுடன் சேர்ந்து இந்தக் கண்டுபிடிப்பை மேற்கொண்டனர்.

இதேபோல், கடந்த ஆண்டு அக்டோபரில், இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய பாம்பு இனத்திற்கும் டிகாப்ரியோவின் பெயரிடப்பட்டது. ‘அங்குகுலஸ் டிகாப்ரியோய்’ என்று பெயரிடப்பட்ட இந்த பாம்பு இனம் மத்திய நேபாளத்திலிருந்து இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்திற்கு இடையில் காணப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *