தள்ளிப்போன விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ – புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |Vijay Deverakonda’s Kingdom gets postponed – Makers announce new release date

தள்ளிப்போன விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ – புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |Vijay Deverakonda’s Kingdom gets postponed – Makers announce new release date


ஐதராபாத்,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தற்போது தனது 12-வது திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இப்படத்திற்கு ‘கிங்டம்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. கவுதம் தின்னனுரி இயக்கியுள்ள இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட், பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகிற 30-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இப்படம் தள்ளிபோயுள்ளது. அதன்படி, ‘கிங்டம்’ படம் வருகிற 30-ம் தேதிக்கு பதில் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான பதிவில்,

“சொன்ன தேதியிலேயே ‘கிங்டம்’படத்தை வெளியிட முயற்சி செய்தோம். ஆனால், சமீபத்தில் நாட்டில் நடந்த எதிர்பாராத நிகழ்வுகளால் விளம்பரம் உள்ளிட்ட மற்ற பணிகளில் ஈடுபட முடியவில்லை. உங்கள் ஆதரவை நாங்கள் உண்மையிலேயே மதிக்கிறோம். ஜூலை 4 அன்று திரையரங்குகளில் உங்களைச் சந்திக்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *