தள்ளிப்போன ஜான்வி கபூரின் ”பரம் சுந்தரி”|Janhvi Kapoor’s Param Sundari gets a new release date

தள்ளிப்போன ஜான்வி கபூரின் ”பரம் சுந்தரி”|Janhvi Kapoor’s Param Sundari gets a new release date


சென்னை,

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜான்வி கபூரின் ‘பரம் சுந்தரி’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகி இருக்கிறது.

சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படம், பஞ்சாபை சேர்ந்த ஒரு ஆணுக்கும் தென்னிந்திய பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாக கொண்டுள்ளது.

தினேஷ் விஜனின் மோடாக் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சுந்தரி என்ற கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ளார். ‘தேவரா’ திரைப்படத்தில் ரசிகர்களை கவர்ந்திருந்த ஜான்வி கபூர் தற்பொழுது மீண்டும் தென்னிந்திய பெண்ணாக நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படம் கடந்த 25-ம் தேதி திரைக்கு வர இருந்தநிலையில், சொன்ன தேதியில் வெளியாகவில்லை. இந்நிலையில், தள்ளிப்போன இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *