"தலைவன் தலைவி" படத்தின் அதிகாரப்பூர்வ வசூல்

சென்னை,
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் ‘தலைவன் தலைவி’. இது விஜய் சேதுபதியின் 52-வது படமாகும். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து ‘பொட்டல முட்டாயே’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
விஜய் சேதுபதி – பாண்டிராஜ் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேற்ப 1,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. கணவன் – மனைவி உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.தமிழில் கிடைத்த வரவேற்பால் இப்படத்தை ஆகஸ்ட் 1ம் தேதி தெலுங்கில் வெளியிட முடிவுசெய்துள்ளனர்.
இந்நிலையில், ‘தலைவன் தலைவி’ திரைப்படம் முதல் மூன்று நாள்களில் ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.