தர்ஷன் நடித்த "சரண்டர்" படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தர்ஷன்  நடித்த "சரண்டர்" படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு


சென்னை,

அப்பிட் பிக்சர்ஸ் நிறுவனம் தனது முதல் பிரமாண்ட படைப்பாக சரண்டர் திரைப்படத்தை பெருமையுடன் வழங்க இருக்கிறது. கிரைம்-ஆக்சன் திரில்லராகவும் உணர்வுப் பூர்வமாகவும் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ் சினிமாவில் முற்றிலும் புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

விக்டர் குமார் தயாரிப்பில் உருவாகும் சரண்டர், அருமையான திரையரங்க அனுபவம் கொடுக்கும் என பட குழு நம்பிக்கை கொடுக்கிறது. திரைக்கதை, இயக்கம் கவுதமன் கணபதி . இவர் பிரபல இயக்குநர் அறிவழகன் உடன் துணை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். தற்போது சரண்டர் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகவிருக்கிறார்.

படத்தின் கதாநாயகனாக தர்ஷன் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவரது தீவிரமான நடிப்பு, கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது என இயக்குநர் பெருமிதத்துடன் கூறுகிறார். அதுமட்டுமல்ல, லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், பதினே குமார் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்காக, பிரபல இசையமைப்பாளர் விகாஸ் பதீசா தமிழில் முதல் முறையாக இசையமைக்கிறார். பிரபல இசையமைப்பாளர்களான தேவி ஸ்ரீ பிரசாத் உட்பட பலருடன் பணியாற்றிய இவர், தனித்துவமான இசை அமைப்புகளுக்காக பாராட்டப்பட்டவர்.

படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது சரண்டர் திரைப்படம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கிறது.

இந்நிலையில் தர்ஷன் நடித்த “சரண்டர்” படத்தின் டீசர் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் விறுவிறுப்பான புதிய அனுபவத்தை வழங்கும் இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும்.

View this post on Instagram

A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *