தர்ஷனின் "ஹவுஸ் மேட்ஸ்" ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை,
நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் புரோடக்ஷன்ஸ் சார்பாக வாழ் , குரங்கு பெடல் , கொட்டுக்காளி , கனா ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக மற்றொரு படம் வெளியாக இருக்கிறது. தற்போது இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார்.
பேண்டஸி ஹாரர் காமெடி படமாக உருவாகி இருக்கும் “ஹவுஸ் மேட்ஸ்”.கதையின் நாயகனாக தர்ஷன் நடித்திருக்கிறார் . இவருடன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் காளி வெங்கட் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.ராஜவேல் எழுதி , இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை விஜய பிரகாஷ் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை ப்ளே ஸ்மித் நிறுவனமும் சௌத் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இத்திரைப்படத்தை பார்த்த முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் படக்குழுவை வாழ்த்தி, பாராட்டியுள்ளார். மேலும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மூலம் உலகம் முழுவதும் வெளியிட உள்ளார்.
இந்த நிலையில், ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாக உள்ளது.