’தயவுசெய்து ஹெல்மெட் அணியுங்கள்…கவனமாக வாகனம் ஓட்டுங்கள்’ – நடிகர் சாய் துர்கா தேஜ்

சென்னை,
நடிகர் சாய் துர்கா தேஜ் சமீபத்தில் ஐதராபாத்தில் ஒரு நிகழ்வில் பங்கேற்றார். கலந்துகொண்டு ரசிகர்களுடன் தனது வாழ்க்கை அனுபவங்கள், போராட்டங்கள் மற்றும் சினிமா பயணம் குறித்து பகிர்ந்துகொண்டார்.
“அனைவரும் ஹெல்மெட் அணியுங்கள். வேகமாக வாகனம் ஓட்டாதீர்கள். பாதுகாப்பாக ஓட்டுங்கள்,”என்று கூறிய அவர், தனக்கு ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு வாழ்க்கை குறித்த தன்னுடைய கண்ணோட்டம் மாறியதை வெளிப்படுத்தினார்.
“அந்த விபத்துக்குப் பிறகு எனக்கு நிறைய சவால்கள் வந்தது. ஒரு கட்டத்தில் சரியாக பேச முடியாத நிலையும் வந்தது. அப்போது நான் தினமும் உடற்பயிற்சி செய்து, புத்தகங்கள் வாசித்தேன். இப்போது எல்லோரிடமும் சொல்ல விரும்புவது ஒன்றே ‘பாதுகாப்பே எப்போதும் முதன்மையானது” என்றார்.