தமிழ் இயக்குனருடன் கைகோர்த்த இளம் தெலுங்கு நடிகர்

சென்னை,
பிரபல தெலுங்கு ஹீரோ கிரண் அப்பாவரம் தற்போது கே-ராம்ப் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக யுக்தி தரேஜா நடித்துள்ளார். ஜென்ஸ் நானி இயக்கி உள்ள இப்படம் வருகிற 18 ஆம் தேதி தீபாவளி பண்டிகை விருந்தாக வெளியாகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக கிரண் படத்தை தீவிரமாக புரமோஷன் செய்து வருகிறார். அந்தவகையில், இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து பணியாற்றுவதை கிரண் சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த படத்தை தமிழ் இயக்குனர் இயக்குவார் என்றும், இந்த படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிப்பை வெளியிடும் என்றும் கிரண் கூறினார்.