தமிழில் நல்ல ஸ்கிரிப்ட் கிடைச்சா ஓடோடி வந்துடுவேன் – ராஷ்மிகா மந்தனா | If I get a good script in Tamil, I will come running

தமிழில் நல்ல ஸ்கிரிப்ட் கிடைச்சா ஓடோடி வந்துடுவேன் – ராஷ்மிகா மந்தனா | If I get a good script in Tamil, I will come running


சென்னை,

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘குபேரா’ படம் வரும் 20-ம் தேதி வெளியாகிறது. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருகிறார். மேலும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீங்க எல்லோரும் ரொம்ப ஆதரவு கொடுத்துட்டு இருக்கீங்க. தமிழ் படங்களில் அதிகம் பார்க்க முடியவில்லை என்று கேட்கிறீர்கள். நானும் காத்துக்கொண்டுதான் இருக்கிறேன். தமிழில் நல்ல கதை கிடைத்தால் ஓடோடி வந்து இருக்கிறேன். கதாநாயாகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க விருப்பம் உள்ளதா என்று கேட்கிறீர்கள். எனக்கு கதைதான் முக்கியம். நல்ல கதை இருந்தால் நடிப்பேன். எனக்கு தமிழ், தெலுங்கு, இந்தி என மொழி வித்தியாசம் கிடையாது. அதுபோல, பான் இந்தியா, ரீஜினல் என வித்தியாசம் பார்க்கமாட்டேன். கதை நன்றாக இருந்தால் நடிப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *