தமிழில் அறிமுகமாகும் ”லக்கி பாஸ்கர்” பட நடிகை |Actress Maanasa choudhary to make Tamil debut

சென்னை,
”லக்கி பாஸ்கர்” படத்தில் சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் நடித்த மானசா சவுத்ரி தற்போது தமிழில் அதர்வாவின் ”டிஎன்ஏ” படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘டி.என்.ஏ’ . ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ”சித்தா” படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும், ”லக்கி பாஸ்கர்” பட நடிகை மானசா சவுத்ரி இதில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இதன் மூலம் இவர் தமிழில் அறிமுகமாக இருக்கிறார். இப்படம் வருகிற 20-ம் தேதி வெளியாக உள்ளது.