தமிழில் அறிமுகமாகும் ‘காந்தாரா சாப்டர் 1’ பட வில்லன்

தமிழில் அறிமுகமாகும் ‘காந்தாரா சாப்டர் 1’ பட வில்லன்


‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படத்தில் நடிகர் குல்ஷன் தேவய்யா வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தார். பாலிவுட் நடிகரான இவர் தமிழ் சினிமாவில் அறிமுகாக இருக்கிறார். தமிழில் ‘லெகசி’ என்ற இணையத் தொடரை சாருகேஷ் சேகர் இயக்குகிறார். இந்தப் படத்தில்தான் குல்ஷன் தேவய்யா அறிமுகமாக இருக்கிறார். ஸ்டோன் பெஞ்ச் பிரைவேட் லிமிடெட் சார்பில் கல்யாண் சங்கர் தயாரிப்பில், சாருகேஷ் சேகர் இயக்கும் இந்தத் தொடர், அதிகாரம், ஒழுக்கம் மற்றும் பழிவாங்கல் ஆகியவற்றின் விறுவிறுப்பான கதையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து குல்ஷன் தேவய்யா “ இந்தியில் 14 ஆண்டுகளாக நடித்துள்ளேன். தற்போது, புதிய விமானத்தில் ஏறியுள்ளேன். புதிய மொழி படத்தில் நடிக்க ‘லெகசி’ எனக்கு வாய்ப்பளித்துள்ளது. வேலை, குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்தையும் மாற்றி மாற்றிசெய்யும் ஒரு காவலதிகாரியாக நடித்துள்ளேன். இந்த வெறுப்பினை நடிப்பில் காட்டுவது சவாலானதாக இருக்கிறது. அனுபமிக்க மாதவன், நிமிஷா சஜயன், கவுதம் கார்த்திக் உடன் நடிப்பது கற்றல் அனுபவம்தான். அவர்கள் அனைவருமே விருப்பத்துடன் நடிக்கிறார்கள். நானும் எனது சிறந்த நடிப்பை தர இருக்கிறேன். ‘லெகசி’ எனக்கு மிகவும் திருப்திகரமான அனுபவமாக உள்ளது, எனது இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக சென்னைக்குத் திரும்ப ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

View this post on Instagram

A post shared by Netflix India (@netflix_in)

தெலுங்கு சினிமாவில் சமந்தா நடித்து தயாரிக்கும் ‘மா இன்டி பங்காரம்’ படத்தில் அவர் இணைந்துள்ளார். நடிகர் குல்சன் தேவய்யா இந்தியில் கடந்த 2004ம் ஆண்டு முதல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *