தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் . இந்தப் படத்தில் நாயகியாக மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு இந்த படத்தின் படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படத்திற்கு ‘கர’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தலைப்பு போஸ்டரை வெளியிட்டுள்ள நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.






