தனுஷ் உடன் காதலா? – ஓபனாக பேசிய மிருணாள் தாகூர்

சென்னை,
நடிகர் தனுசும், நடிகை மிருணாள் தாகூரும் காதலித்து வருவதாக இணையத்தில் பலரால் செய்திகள் பரப்பப்பட்டு வந்தது. தற்போது அந்த செய்திகளை மறுத்து அணைத்திற்கும் நடிகை மிருணாள் தாகூர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அதன்படி, தானும் தனுசும் நல்ல நண்பர்கள் வேறு எதுவும் எங்களுக்குள் இல்லை எனவும் சமூகவலைதளத்தில் வெளியான வதந்திகளை பார்த்து சிரிப்புதான் வருகிறது என்றும் கூறினார். மேலும், நடிகர் தனுஷ், ‘சன் ஆப் சர்தார் 2’ நிகழ்வில் கலந்து கொண்டதை யாரும் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் எனவும் மிருணாள் தாகூர் கூறியுள்ளார்.
மிருணாள் தாகூர் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் ‘சன் ஆப் சர்தார் 2’ . அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது.
தெலுங்கு திரையுலகில் மிருணாள் தாகூர் நல்ல வெற்றியைப் பெற்றிருந்தாலும், அவரது பாலிவுட் படங்கள் தொடர்ந்து பின்னடைவுகளைச் சந்தித்து வருகின்றன.