”தனுஷைத் தவிர வேறு எந்த இந்திய நடிகருக்கும் அந்த துணிச்சல் கிடையாது”

சென்னை,
தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் ”குபேரா” படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இதில், சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அந்த நிகழ்வில் பேசிய சிரஞ்சீவி, ”குபேரா”வில் தேவாவாக நடித்த தனுஷ் தேசிய விருதுக்கு தகுதியானவர் என்று கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் கூறுகையில், “”குபேரா” படத்தில் தேவாவாக நடிக்கும் துணிச்சல் தனுஷை தவிர வேறு எந்த இந்திய நடிகருக்கும் கிடையாது. எனக்கு கூட இல்லை. இதற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கவில்லை என்றால், விருதுகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. “குபேரா”வில் தனிஷின் நடிப்பு என்னை சிந்திக்க வைத்தது” என்றார்.