தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை

தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை


சென்னை,

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘பவர் பாண்டி, ராயன்’ போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதனை தொடர்ந்து தற்போது ‘நிலவு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் பிப்ரவரி 7-ந் தேதி வெளியாக உள்ளது. மேலும் இட்லி கடை படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இப்படம் ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து ‘ராஞ்சனா’ மற்றும் ‘அட்ராங்கி ரே’ போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ் இணைந்துள்ளார். ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இணைந்துள்ளதாக படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, நடிகை கீர்த்தி சனோன் ‘தேரே இஸ்க் மெய்ன்’ படத்தில் இணைந்துள்ளதை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அப்பேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *