தனுஷின் ”இட்லி கடை” பட டிரெய்லர் வெளியானது|Dhanush’s ‘Idli Kadai’ trailer released

தனுஷின் ”இட்லி கடை” பட டிரெய்லர் வெளியானது|Dhanush’s ‘Idli Kadai’ trailer released


சென்னை,

தனுஷ் நடித்துள்ள ”இட்லி கடை” படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

தனுஷ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் இட்லி கடை. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று கோவையில் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், தற்போது டிரெய்லர் வெளியாகி உள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *