தனது முதல் படத்திற்கு பிரபாஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?|Do you know how much Prabhas paid for his first film?

தனது முதல் படத்திற்கு பிரபாஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?|Do you know how much Prabhas paid for his first film?


சென்னை,

இந்தியா முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட ஹீரோ பிரபாஸ். சமீபத்தில் பிரபாஸ் ஹீரோவாக அறிமுகமாகி 23 ஆண்டுகள் நிறைவடைந்தன. ஹீரோவாக அவரது முதல் படம் ஈஷ்வர். இது படம் 2002-ம் ஆண்டு நவம்பர் 11 அன்று வெளியானது.

இப்படம் வெறும் ரூ. 1 கோடி பட்ஜெட்டில் உருவானது. அது ரூ. 3.6 கோடி வசூலை ஈட்டியது. பிரபாஸ் தனது முதல் படத்திற்கு சுமார் ரூ.4 லட்சம் சம்பளம் வாங்கினார். இப்போது அவர் ஒவ்வொரு படத்திற்கும் ரூ. 150 கோடிக்கு மேல் வாங்குகிறார்.

பிரபாஸ், தற்போது பல படங்களில் பிஸியாக இருக்கிறார். அவரை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அவர் நடிப்பில் அடுத்து திரைக்கு வர உள்ள படம் தி ராஜா சாப். இப்படம் தமிழில் 10-ம் தேதியும் மற்ற மொழிகளில் 9-ம் தேதியும் வெளியாகிறது. பவுஜி படத்திலும் அவர் நடித்து வருகிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *