தந்தை ஜெராக்ஸ் கடை ஓனர்…மகன் தொடர் ரூ.100 கோடி படங்களை கொடுத்து வரும் நடிகர்…யார் தெரியுமா?|Actor-director Pradeep Ranganathan has shared that his father still runs their family’s Xerox

சென்னை,
தங்கள் மகன் பெரிய ஹீரோவாக இருக்கும் போதிலும், இன்னும் எளிமையான வாழ்க்கையை சில பெற்றொர்கள் வாழ்ந்து வருகிறார்கள். உதாரணமாக, பான் இந்திய ஸ்டார் யாஷ்…இவர் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற போதிலும், அவரது தந்தை இன்னும் ஒரு பேருந்து ஓட்டுநராக வேலை செய்கிறார். அதேபோல், மற்றொரு ஹீரோவின் தந்தை இன்னும் ஒரு ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.
ஒருபுறம், அவரது மகன் தொடர்ச்சியாக நூறு கோடி படங்களை கொடுத்து வருகிறார். அவரது தந்தை ஒரு ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். அந்த ஹீரோ வேறு யாருமல்ல, பிரதீப் ரங்கநாதன்தான்.
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப், லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த இந்தப் படம் ரூ.100 கோடி வசூலித்தது. இதன் பிறகு டிராகன் படத்தின் மூலம் அடுத்த நூறு கோடி படத்தை கொடுத்தார். இப்போது, டியூட் படத்த்தின் மூலம் தொடர்ச்சியாக 3 ரூ.100 கோடி படத்தை கொடுத்து கவனிக்க வைத்திருக்கிறார்.
இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின்போது பேசிய பிரதீப், தனது தந்தை இன்னும் ஒரு ஜெராக்ஸ் கடை நடத்தி வருவதாகவும், கார் வாங்கித் தருவதாகச் சொன்னாலும்.. இன்னும் பேருந்தில் பயணம் செய்வதாகவும் கூறினார்.






