‘தணல்’ படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

சென்னை,
”பாணா காத்தாடி”, ”பரதேசி”, ”சண்டிவீரன்” போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் அதர்வா . இவர் தற்போது ‘இதயம் முரளி’ படத்தை தன் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில், அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் ‘தணல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதில் அஸ்வின், லாவண்யா திரிபாதி , பிரதீப் விஜயன், சர்வா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்சன் திரில்லரில் தயாராகி உள்ள இத்திரைப்படம் வரும் 12-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தணல் படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான ராது இன்போடெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.