தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை


துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தி வந்ததாக கன்னட நடிகை ரன்யா ராவை கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 கிலோ தங்கம் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது ரன்யா ராவ் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தங்கக் கடத்தல் வழக்கில் பண முறைகேடும் நடைபெற்றிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின்பேரில், அமலாக்கத் துறையும் சிபிஐயும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக அமெரிக்க குடியுரிமை உள்ள தருண் ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார்..

இந்த நிலையில், செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரன்யாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும், தண்டனை காலம் முழுவதும் ஜாமின் கோரும் உரிமை கிடையாது என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *