தகாத தொடுதலை அனுபவித்தேன்…கல்லூரி காலத்தில் எதிர்கொண்ட துன்புறுத்தலை நினைவு கூர்ந்த நடிகைDiana Penty Recalls Facing Harassment In Mumbai Trains During College

மும்பை,
கல்லூரி காலத்தில் மும்பையில் ரெயில் பயணத்தின்போது துன்புறுத்தலை எதிர்கொண்டதாக நடிகை டயானா பென்டி தெரிவித்திருக்கிறார். பேருந்தில் அல்லது நெரிசலான இடங்களில் செல்லும்போது தகாத தொடுதலை அனுபவித்ததாகவும் கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்,
“மும்பையில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் இதை அனுபவித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். கல்லூரிக்குச் செல்ல, பைகுல்லாவிலிருந்து விடி வரையிலான ரெயிலில் ஏறி, பின்னர் கல்லூரிக்கு நடந்து செல்வேன். அப்போது ரெயிலில் செல்லும்போது என்னை திட்டுவார்கள், முழங்கைகளால் அடிப்பார்கள்.
அது என் அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருந்தது. திருப்பித் கொடுக்கும் தன்னம்பிக்கை எனக்கு அப்போது இல்லை. அதேபோல், பேருந்தில் அல்லது நெரிசலான இடங்களில் செல்லும்போது தகாத தொடுதலை அனுபவித்தேன் ” என்றார்.
டயானா பென்டி தற்போது ”டிடெக்டிவ் ஷெர்டில்” என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் தில்ஜித் டோசன்ஜ், போமன் இரானி, சங்கி பாண்டே மற்றும் பனிதா சந்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் தற்போது ஜீ 5 ல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.