டோலிவுட்டிலிருந்து கோலிவுட்…தமிழில் கால் பதிக்கும் ''கோர்ட்'' கதாநாயகி

சென்னை,
நடிகர் நானி தயாரிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான ”கோர்ட்” படம் மகத்தான வெற்றி பெற்றது. இதில், பிரியதர்ஷி புலிகொண்டா, ஸ்ரீதேவி அப்பல்லா, ஹர்ஷ் ரோஷன், சாய் குமார், ரோகிணி, சிவாஜி உள்ளிட்ட பலர் நடித்தனர். இப்படம் ரூ.50 கோடி வசூலை பெற்று அசத்தியது.
இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்து கவனம் ஈர்த்த ஸ்ரீதேவி அப்பல்லா டோலிவுட்டிலிருந்து கோலிவுட்டிற்கு சென்றிருக்கிறார்.
தமிழில் கால் பதிக்கும் ஸ்ரீதேவி, தயாரிப்பாளரும் நடிகருமான கேஜேஆருடன் இணைந்திருக்கிறார். இது கேஜேஆர் கதாநாயகனாக நடிக்கும் 2-வது படமாகும். இப்படத்தின் பூஜை தற்போது நடந்திருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்களை ஸ்ரீதேவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இந்த படத்தை ரீகன் ஸ்டானிஸ்லாஸ் எழுதி இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் குறித்த மேலும் அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும்.