டெலிவரி பாயாக ஷாருக்கான் வீட்டில் நுழைய முயன்றவருக்கு நேர்ந்த சம்பவம்

டெலிவரி பாயாக ஷாருக்கான் வீட்டில் நுழைய முயன்றவருக்கு நேர்ந்த சம்பவம்


இந்திய திரை உலகில் மட்டுமின்றி சர்வதேச அளவில் ரசிகர்களை கொண்டவர் ஷாருக்கான். அவரை நேரில் பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் பலர் விசித்திரமான முயற்சிகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் பிரபல சோசியல் மீடியா பிரபலமான சுபம் பிரஜாபத் சுவாரசியமான ஒரு பணியினை செய்தார்.

ஷாருக்கான் வீட்டின் பாதுகாப்பை சோதிக்கும் வகையில் உணவு டெலிவரி நபர் போல் அவர் ஷாருக்கான் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் நுழையும் காட்சிகள் நேரலையாக சமூக வலைதளங்களில் வெளியாகி கொண்டிருந்தது. இதைக் கண்டு பலரும் ரசித்துக் கொண்டிருந்தனர்.

ஷாருக்கான் வீட்டின் முன்பு உணவு டெலிவரி பாயாக சென்ற பிரஜாபத் வீட்டு காவலாளியிடம் காபி டெலிவரி செய்ய வந்துள்ளதாக கூறுகிறார். டெலிவரி பையை முதுகில் சுமந்து கொண்டு வந்த பிரஜாபத்தை யார் என்று தெரியாமல் உண்மையிலேயே டெலிவரி பாய் என எண்ணி அவரை காவலாளி வீட்டுக்குள் அனுமதித்தார். இது மட்டுமின்றி பின்புறத்தில் உள்ள ரகசிய கதவு வழியாக காபியை எடுத்து செல்லுமாறு கூறுகிறார்.

இதைத்தொடர்ந்து ஷாருக்கான் வீட்டிற்குள் பிரஜாபத் செல்லத் தொடங்கினார். ஷாருக்கானை நேரில் சந்தித்து விடலாம் என்று ஆசையோடு சென்ற அவருக்கு வீட்டிற்குள் இருந்த இன்னொரு காவலாளியால் ஏமாற்றம் ஏற்பட்டது. பிரஜாபத்தை யார் என்று அவர் கேள்வி கேட்க ஒரு வழியாக பிரஜாபத்தின் நாடகம் வெளியாகிவிட்டது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிக்க வைக்கிறது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *