"டூரிஸ்ட் பேமிலி" பட இயக்குநரை புகழ்ந்த ஆட்டோ டிரைவர்

சென்னை,
அயோத்தி, கருடன், நந்தன்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை அடுத்து சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் ‘டூரிஸ்ட் பேமலி’. குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. அபிஷன் ஜீவிந்த் இயக்கும் இந்தப் படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த மே 1-ந் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இலங்கை தமிழர்களான சசிகுமார் குடும்பம் அங்குள்ள பொருளாதார சூழல் காரணமாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அதன்பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடனும், எமோஷ்னலுடனும் படம் பதிவு செய்துள்ளது.சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஜன் ஜீவிந்த், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.
இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று நாளுக்கு நாள் வசூலையும் வாரி குவித்து வருகிறது. இந்த படத்திற்காக கூடுதல் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்படம் 4வது வாரத்தில் வெற்றிநடைபோட்டு வருகிறது. குடும்பங்கள் கொண்டாடும் இப்படம் இன்றுவரையிலும் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் பேமலி’ திரைப்படம் ஜப்பானிலும் வெளியானது. இத்திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.86 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஜூன் 2 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியது.
ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜமவுலி, சூர்யா, நானி ஆகியோரை தொடர்ந்து நடிகர் கிச்சா சுதீப்பும் இந்தப் படத்தைப் பாராட்டியுள்ளார்.
ஆட்டோ டிரைவருடன் நடந்தது குறித்து இயக்குநர் அபிஷன் ஜீவிந் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது “மாஸ்க் அணிந்து எனது சொந்த ஊருக்கு ஆட்டோவில் சென்றேன். அப்போது ஆட்டோக்கார அண்ணா ‘முகை மழை’ பாடலை அவரது யூடியூபில் எதேர்ச்சையாக வைத்தார். எனது முகம் உடனே மலர்ந்து அவரிடம் ‘இந்தப் படம் பிடித்ததா?’ எனக் கேட்டேன். அந்த அண்ணா தயக்கமே இல்லாமல், ‘டூரிஸ்ட் பேமலி’ படத்தை 3 முறை திரையரங்கில் பார்த்தேன்’ எனக் கூறினார். அவரது கையைக் காட்டி ‘இதோ பாருங்கள்.’டூரிஸ்ட் பேமலி’ படத்தைப் பற்றி பேசினால் புல்லரிக்கிறது. அந்தளவுக்கு படம் பிடிக்கும்’ எனக் கூறினார்.
படத்தில் சசிகுமார் சார் கதாபாத்திரத்துடன் எப்படி ஒன்ற முடிந்தது எனக் கூறினார். அவரது சொந்த தந்தையும் குடும்பத்திற்காக கடினமாக உழைத்ததாகக் கூறினார். .மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லைஅவரது தந்தை இறந்துவிட்டதால் இந்தப் படம் அவருக்கு பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்ததாகக் கூறினார். பேசிக்கொண்டு இருக்கும்போதே உணர்ச்சிவசப்பட்டு அழுதார். நான்தான் இந்தப் படத்தின் இயக்குநர் எனக் கூறியதும் மிகவும் மகிழ்ச்சியடைந்து படத்தின் மீதான அன்பை வெளிக்காட்டினார். என்ன ஒரு தருணம். நம்முடைய சிறிய பங்களிப்பினால் அடுத்தவர்கள் சிரிப்பது, மனம் ஆறுதல் அடைவதை உணரும்போது அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை ” என்றார்.