‘டீமன் ஸ்லேயர்: கிமெட்ஸு நோ யைபா – இன்பினிட்டி கேஸ்டில்’ தொடரின் வசூல் இத்தனை கோடியா? | How many crores has the ‘Demon Slayer: Kimetsu no Yaiba

‘டீமன் ஸ்லேயர்: கிமெட்ஸு நோ யைபா – இன்பினிட்டி கேஸ்டில்’ தொடரின் வசூல் இத்தனை கோடியா? | How many crores has the ‘Demon Slayer: Kimetsu no Yaiba


சென்னை,

ஜப்பானிய அனிமேஷன் தொடர்களுக்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில், பிரபல ஜப்பானிய மங்கா தொடரை (Manga Series) தழுவி ‘டீமன் ஸ்லேயர்: கிமெட்ஸு நோ யைபா – இன்பினிட்டி கேஸ்டில்’ (Demon Slayer – Kimetsu no Yaiba Infinity Castle) என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

“கிமெட்ஸு நோ யைபா” தொடரில் இடம்பெற்ற “இன்பினிட்டி கேஸ்டில்” அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.இந்த தொடர் இளைஞர்கள் மத்தியில், குறிப்பாக ‘2K கிட்ஸ்’ மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

கடந்த 12ந் தேதி இந்தியாவில் வெளியான இந்த தொடர்,முதல் நாளிலிருந்தே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் இந்த தொடர் ரூ.73 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் இதுவரை எந்த அனிமேஷன் தொடரும் செய்யாத, வசூல் சாதனை இந்த தொடர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *