டீசல் படத்தின் பிடிஎஸ் வீடியோவை பகிர்ந்த நடிகை அதுல்யா ரவி|Actress Athulya Ravi shares BTS video from Diesel

சென்னை,
ஹரிஷ் கல்யாண் கெரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வெளியான படம் ‘டீசல்’. இப்படத்தை சண்முகம் முத்துச்சாமி இயக்கியிருந்தார். இதில் அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகை அதுல்யா ரவி இப்படத்தின் பிடிஎஸ் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






