'டிராகன்' படத்தின் 'ஏன்டி விட்டு போன?' பாடல் வெளியானது

'டிராகன்' படத்தின் 'ஏன்டி விட்டு போன?' பாடல்  வெளியானது


சென்னை,

ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக டிராகன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குநர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரைஸ் ஆப் தி டிராகன்’ மற்றும் ‘வழித்துணையே’ பாடல்கள் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ‘டிராகன்’ படத்தின் ‘ஏன்டி விட்டு போன?’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை சிலம்பரசன் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *