டியூட் பட விழா….மமிதா பைஜு எங்கே? – இதயத்தை காட்டிய பிரதீப் ; வைரலாகும் வீடியோ

டியூட் பட விழா….மமிதா பைஜு எங்கே? – இதயத்தை காட்டிய பிரதீப் ; வைரலாகும் வீடியோ


சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல் ஐ கே படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 18-ம் தேதி வெளியாக் உள்ளது.

இது மட்டுமில்லாமல் டியூட் படத்திலும் பிரதீப் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா நடித்துள்ளார். இப்படம் வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. மமிதாவை தவிர படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

அப்போது ரசிகர்கள் மமிதா எங்கே ? என கேட்டனர். அதற்கு பிரதீப் தனது இதயத்தை காட்டி இங்கே இருக்கிறார் என்றார். பின்னர் மமிதா தற்போது சூர்யா சார் படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாகவும் நாளைக்குள் புரமோஷனின் கலந்துகொள்வார் எனவும் கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *