‘டியூட்’ படத்தில் மீண்டும் இளையராஜா பாடல்|Ilayaraja song again in ‘Dude’

‘டியூட்’ படத்தில் மீண்டும் இளையராஜா பாடல்|Ilayaraja song again in ‘Dude’


சென்னை,

இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த “கருத்த மச்சான்” மற்றும் “100 வருஷம்” ஆகிய பாடல்களை, அவரது அனுமதி இல்லாமல் “டியூட்” திரைப்படத்தில் பயன்படுத்தியதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இளையராஜாவுக்கு சாதகமாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. டியூட் பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், உடனடியாக இந்த பாடல்களை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 3) மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, டியூட் பட விவகாரத்தில் இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டது என்றும் டைட்டில் கார்டில் நன்றி தெரிவிக்கப்படும் எனவும் மைத்திரி மூவி மேக்கர் நிறுவனம் ஐகோர்ட்டில் பதிலளித்தது.

தொடர்ந்து இரு தரப்பினரும் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டதால், வழக்கை முடித்து வைத்து நீதிபதி என்.செந்தில் குமார் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி மீண்டும் டியூட் படத்தில் கருத்த மச்சான், 100 வருஷம் பாடல்கள் இடம்பெறவுள்ளன.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *