`டியூட்’படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் பார்த்த பிரதீப் ரங்கநாதன் – வெளியே வந்து சொன்ன வார்த்தை|Pradeep Ranganathan watched the movie `Dude` with fans in the theater

சென்னை ,
சென்னை குரோம்பேட்டையில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து டியூட் படத்தை கண்டு ரசித்த நடிகர் பிரதீப் ரங்கநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “என்னுடைய முதல் தீபாவளி படம்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு . எல்லோரும் ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன். தீபாவளி அன்று மீண்டும் மக்களோடு படத்தை பார்ப்பேன்’ என்றார்.
பிரதீப் ரங்கநாதன், கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘டியூட்’ படத்தில் நடித்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரித்த இப்படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுவதுமாக காமெடி கலந்த படமாக இன்று திரைக்கு வந்துள்ளது.