'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்திலிருந்து கோவிந்தா பாடல் நீக்கம்

சென்னை,
இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது.
சமீபத்தில் இப்படத்திலிருந்து (கிஸ்ஸா 47) ‘கோவிந்தா’ என்று தொடங்கும் பாடல் வெளியானது. அந்த பாடலில் இடம் பெற்ற வரிகள் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருந்ததாக புகார் எழுந்தது.
அதனை தொடர்ந்து, திரைப்பட தயாரிப்பாளர் மீது திருப்பதி காவல் நிலையத்தில் ஜனசேனா கட்சியினர் புகார் செய்தனர். மேலும், அந்த பாடலை படத்திலிருந்து நீக்கக் கோரியும், ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டும் பட நிறுவனத்திற்கும் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படக்குழுவினர் படத்தில் இருந்து (கிஸ்ஸா 47) கோவிந்தா என்ற பாடலை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.