‘டான்’களுக்கு ஜோடியாக நடிப்பது ஏன்? – ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம், Why is she acting opposite ‘dons’?

கன்னடத்தில் வெளியாகி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படம், ‘கே.ஜி.எப்.’. இதன் இரண்டாம் பாகமும் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. ‘கே.ஜி.எப்.’ படத்தின் 2 படங்களிலும் நாயகியாக நடித்து கவனம் ஈர்த்த, ஸ்ரீநிதி ஷெட்டி தமிழில் விக்ரமுடன் ‘கோப்ரா’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது நானி ஜோடியாக அவர் நடித்துள்ள ‘ஹிட்-3’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதற்கிடையில் பட விழாவில் கலந்துகொண்ட ஸ்ரீநிதி ஷெட்டியிடம், ‘கே.ஜி.எப்’ படத்தில் யாஷ், ‘கோப்ரா’ படத்தில் விக்ரம், ‘ஹிட்-3’ படத்தில் நானி என ‘டான்’ கதாபாத்திரங்களுக்கு ஜோடியாக நடிப்பது ஏன்? இது உங்கள் ஆசையா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஸ்ரீநிதி ஷெட்டி, “அதுமாதிரியான கதாபாத்திரங்கள்தான் என்னை தேடி வருகிறது. அது ஏன்? என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால் இதுவும் ஒருமாதிரியாக நல்லாவே இருக்கிறது. ‘டான்’ ஆக நடிப்போருக்கு நாம் ஜோடி சேருவது சிறப்பு தானே… அந்த ‘டான்’ நம் கைவசம் என்று நினைக்கும்போது மகிழ்ச்சி. அதனால் சரி போகட்டும் என்று விட்டுவிட்டேன்” என்று கலகலப்பாக பதில் அளித்தார்.






