"டயட்" என்றாலே அலர்ட்டாகும் நடிகை சமந்தா

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவர் கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த ‘விண்ணைதாண்டி வருவாயா’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து ‘பானா காத்தாடி, நீதானே பொன் வசந்தம், அஞ்சான்’ என பல படங்களில் நடித்து பிரபலமானார்.அதனை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார் சமந்தா. 2014-ம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து, விஜய்யுடன் இணைந்து ‘தெறி, மெர்சல்’ என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
கடைசியாக தமிழ் சினிமாவில் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருந்த போதிலும் சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார். அப்பாவின் மறைவு, மயோசிடிஸ் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். மீண்டும் முன்புபோல படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
திரையுலகில் கிட்டத்தட்ட 15 வருடங்களை வெற்றிகரமாக கடத்துவிட்ட சமந்தா தற்போது படங்களில் அதிக அளவு நடிப்பதை குறைத்துக் கொண்டுள்ளார் ஒருபக்கம் வெப் சீரிஸில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். எங்கு சென்றாலும் தனது உடற்பயிற்சியை மட்டும் நாள்தோறும் தவறாமல் தொடர்ந்து செய்து வருகிறார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவ்வப்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களின் பார்வைக்கு பதிவிட்டு வருகிறார் .
மீண்டும் சினிமாவில் களமிறங்கியுள்ள சமந்தா ‘சுபம்’ என்ற படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். தற்போது புதிய படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.
சமீபகாலமாக உடல் எடையைக் குறைத்து மிகவும் ‘ஸ்லிம்’ ஆக மாறியிருக்கிறார், சமந்தா. பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை, சிவப்பு இறைச்சி உணவுகளைத் தவிர்த்து வருகிறார். காய்கறி மட்டுமே உணவாக எடுத்து வருகிறார். இதனால் சமந்தாவின் ‘டயட்’ என்னவென்று அவர் செல்லும் இடங்களிலும், அவரது சமூக வலைதள பக்கங்களிலும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். ஆனாலும் சமந்தா வாயைத் திறப்பதே இல்லையாம். ஏற்கனவே சமந்தா சொன்ன ஒரு மருத்துவ சிகிச்சை ஆபத்தானது என்று பெரியளவில் எதிர்ப்புகள் கிளம்பியதால், இந்தமுறை சமந்தா ‘அலர்ட்’ ஆகிவிட்டார். இதனால் யார் கேட்டாலும், ‘பிடித்ததை சாப்பிடுங்க’ என்று கும்பிடு போடாத குறையாக கூலாக சொல்லி தப்பித்து விடுகிறார்.